சித்தாரிய்யா அரபிக் கல்லூரி ஓர் அறிமுகம்

நமது சித்தாரிய்யா அரபிக் கல்லூரி 2001 ஆம் ஆண்டு மௌலானா மௌலவி அல்ஹாஜ் இ.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்களால் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் தோற்றுவிக்கப்பட்டு 07.07.2007 முதல் மௌலவி ஆலிம் ஸனது (பட்டம்) வழங்கியும் சென்னை பல்கலைக்கழகம் வழங்குகின்ற அஃப்ஜலுல் உலமா [B.A.(Arabic)] பட்டம் பெற வைத்தும் பல உலமா பெருமக்களை நம் சமுதாயத்திற்கு தீன் பணியாற்ற உருவாக்கி வருகின்றது.

அல்ஹம்துலில்லாஹ் !!!

சித்தாரிய்யா அரபிக் கல்லூரி உருவான விதம்

இந்தியாவின் தென் தமிழகத்தில் இஸ்லாமிய தொண்டை சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு செய்து வருவது நமது இராமநாதபுரம் மாவட்டம் தான். ஏர்வாடி அல்குத்பு ஷஹீது இபுராஹிம் பாதுஷா நாயகம் முதல் இன்றும் என்றும் யாராகினும் சிலரோ பலரோ இறை பணியை செய்து கொண்டே இருப்பார்கள். அவ்வகையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத்தின் தாயிக்கெல்லாம் தாய் மதரஸா கீழக்கரை அரூஸியா தைக்கா போன்று இறை பணியை தொடங்கியுள்ள நமது சீர்மிகு சித்தார்கோட்டை சித்தாரிய்யா அரபிக்கல்லூரியும் கடந்த இருபது ஆண்டுகளாக ஐந்தாண்டுகளில் மௌலவி பட்டம் வழங்கி சீரோடும் சிறப்போடும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கல்லூரி கி.பி.2001 ஆம் ஆண்டு முஹம்மது இபுராஹிம் - ஹஜ்ஜா சவ்தாம்மாள் தம்பதியினரின் மகனார் மௌலானா மௌலவி அல்ஹாஜ் இ.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்களால் சித்தார்கோட்டையில் துவக்கப்பட்டு அவர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இப்பெருமகனார் தொண்டி, அம்மாபட்டிணம் போன்ற ஊர்களிலுள்ள அரபுக் கல்லூரிகளில் முதல்வராக சிறப்பான முறையில் பணியாற்றி சிறந்த மார்க்க முத்துக்களை உருவாக்கினார்கள். தமது மார்க்க பணியை கடல் கடந்து மலேசியா நாட்டிலும் தொடர்ந்தார்கள். அந்த ஆலிம் பெருந்தகை, தொண்டி அஜ்ஹரியா அரபுக் கல்லூரியில் 1985-ஆம் ஆண்டு வாக்கில், அக்கல்லூரியின் விரிவாக்கப் பணிக்காக இலங்கையிலிருந்து வந்த பெரிய வியாபாரியிடம் கல்லூரி நிர்வாகிகளுடன் சென்று உதவி கோரிய போது நீங்கள் யார்? எந்த ஊர் ? என்றெல்லாம் கேட்டு தெரிந்த பின் நீங்கள், தங்களது ஊரில் ஒரு அரபுக் கல்லூரியை தொடங்க வேண்டும், அங்கும் இல்லாமல் தானே இருக்கிறது என்று அவர் சொல்ல அன்றே தனது ஆழ்மனதில் ஒரு அரபுக் கல்லூரி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின்பு அதுவே அவரது இலட்சியமானது. அதனை அல்லாஹ் அன்றே ஒப்புக் கொண்டான் போலும். ஆகையால் தான் சித்தார்கோட்டைக்கு இன்று ஒரு அரபுக் கல்லூரி கிடைத்திருக்கிறது. அறிவு பசியும் ஆன்மிக பசியும் முழுமையாக போக்கும் அம்சம் கொண்ட ஊராக சித்தார்கோட்டை இருக்கிறது.அறிவு, ஆன்மிக களஞ்சியம் பெற்ற பாக்கியசாலிகளான மஹான்கள் நைனார் முஹம்மது லெப்பை ஆலிம், மௌலானா மௌலவி அஹமது இப்ராகிம் ஆலிம் ஃபாஜில் பாகவி (பெரிய ஆலிம்), மௌலானா மௌலவி முஹம்மது லெப்பை ஆலிம் பாகவி (சின்ன ஆலிம்) , மௌலானா மௌலவி அப்துல் ஹையி ஆலிம் பாகவி, மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது சலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பயீ போன்றவர்கள் அடங்க பாக்கியம் பெற்ற ஊராகும்.

முக்கிய அறிவிப்புகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது
"தொட்டில் முதல் மண்ணறை வரை அறிவைத் தேடுங்கள்"
தினசரி வகுப்புகள் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும்
!!! வெள்ளிக்கிழமை விடுமுறை !!!
எங்களை தொடர்பு கொள்ள
9443 655 135

அன்புள்ள மாணவர்களே,

கோவிட் -19 தொற்றுநோய் நமது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் 9 ஜூன் 2021 புதன் கிழமை முதல் பொது முடக்கம் முடிவுக்கு வரும் வரை நமது சித்தாரிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெறும் அனைத்து வகுப்புகளும் வாட்ஸ்அப் வழியாக நடைபெறும் என்பதையும் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஆன்லைன் கற்றல் குறித்த விவரங்களுக்கு தயவுசெய்து அந்தந்த ஆசிரியர்களை தொடர்பு கொள்ளவும். மேலும் சமீபத்திய அறிவிப்புகளுடன் உங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க உங்கள் வாட்ஸ்அப்பை அடிக்கடி சரிபார்க்கவும்.

அனைவரின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் துஆ செய்வோம்.

*****

வளர்ச்சியில் பங்கு பெற
AS-SATHARIYYA TRUST
BANK: ICICI
A/c NO: 617005038817
BRANCH: PANAIKULAM
IFSC : ICIC0006170