﷽
அரபி,ஆங்கிலம்,உருது ஆகிய மும்மொழி நவீன பாடத்திட்ட அமைப்பில் அஃப்ஜலுல் உலமா படிப்பு, கம்ப்யூட்டர் கலையுடன் கூடிய ஐந்தாண்டு கால "மௌலவி ஆலிம்" (இஸ்லாமிய மார்க்க) பட்டப் படிப்பு பயில்வது.
கல்லூரி விடுதியில் தங்கி கொண்டு சித்தார்கோட்டை முஹம்மதியா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை பயில்வது, ஐவேளை தொழுகை, நல்லொழுக்கப்பயிற்சி, கம்ப்யூட்டர் கலை, அரபி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் சரளமாக பேச, எழுத அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற திறமை மிக்க ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளித்தல்.
தஜ்வீத் கலையுடன் கூடிய மூன்று ஆண்டு கால ஹிஃப்ளுல் குர்ஆன் (குர்ஆன் மனனப் பிரிவில்) பயில்வது.
1 | التفسير தஃப்ஸீர் | திருக்குர்ஆன் விரிவுரை |
2 | الحديث ஹதீஸ் | நபிகளாரின் பொன்மொழிகள் |
3 | الفقه ஃபிக்ஹு | இஸ்லாமிய சட்டக் கலை |
4 | التاريخ தாரீஹ் | வரலாறு |
5 | العقيدة அகீதா | இஸ்லாமியக் கொள்கை |
6 | الصرف சர்ஃப் | சொல்லிலக்கணம் |
7 | النحو நஹ்வு | இலக்கணம் |
8 | الأدب அதப் | இலக்கியம் |
9 | الأخلاق அஹ்லாக் | குணவியல் |
10 | الآداب ஆதாப் | ஒழுக்கவியல் |
11 | الأصول உசூல் | இஸ்லாமிய சட்ட மூலாதாரம் |
12 | الانشاء இன்ஷா | கட்டுரை |
13 | البلاغة பலாகா | அணி இலக்கணம் |
14 | العروضة அரூழா | யாப்பிலக்கணம் |
15 | الجغرافية ஜாஃராபிய்யா | புவியியல் |
16 | الفلك ஃபலக் | வானவியல் |
17 | الحساب ஹிஸாப் | கணிதவியல் |
18 | الهندسة ஹன்தஸா | வடிவக் கணிதம் |
19 | الفرائض ஃபராயிழ் | பாகப் பிரிவினைச் சட்டம் |
20 | المنطق மன்திக் | தர்க்கக் கலை |
21 | اللغة லுகத் | மொழியியல் |
ஆன்லைன் வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது
"தொட்டில் முதல் கல்லறை வரை அறிவைத் தேடுங்கள்"
தினசரி வகுப்புகள் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும்
!!! வெள்ளிக்கிழமை விடுமுறை !!!
எங்களை தொடர்பு கொள்ள
9443 655 135
அன்புள்ள மாணவர்களே,
கோவிட் -19 தொற்றுநோய் நமது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் 20 ஜூன் 2020 சனிக்கிழமை முதல் பொது முடக்கம் முடிவுக்கு வரும் வரை நமது சித்தாரிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெறும் அனைத்து வகுப்புகளும் வாட்ஸ்அப் வழியாக நடைபெறும் என்பதையும் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஆன்லைன் கற்றல் குறித்த விவரங்களுக்கு தயவுசெய்து அந்தந்த ஆசிரியர்களை தொடர்பு கொள்ளவும். மேலும் சமீபத்திய அறிவிப்புகளுடன் உங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க உங்கள் வாட்ஸ்அப்பை அடிக்கடி சரிபார்க்கவும்.
அனைவரின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் துஆ செய்வோம்.